Wed. May 22nd, 2024

பாவனையாளர்களின் அலட்சியமே எரிவாயு வெடிப்புக்கு காரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அண்மைய சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புகளுக்கு தரம் குறைந்த குழாய்கள், அடுப்புகள் மற்றும் பாவனையாளர்களின் அலட்சியப் பாவனையினால் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் லங்கா தெரிவித்துள்ளது.

இன்று பத்திரிகைளில் வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பில், நிறுவனம் தனது அறிக்கையை நிரூபிக்க அதன் இரசாயன அறிக்கைகள் உட்பட நான்கு முக்கிய காரணிகளை முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதேவேளை வாயு கலவையை 50% புரொப்பேன் (Propane) மற்றும் 50% பியூட்டேன் (Butane) என மாற்றினால் வாயு கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மொறட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். .

அண்மைய எரிவாயு தொடர்பான வெடிப்புகளுக்கு இதுவே வெளிப்படையாகக் காரணம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நாடாளுமன்றத்தில் இன்று கூடிய அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இந்த விடயங்களை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, வாயு கலவையை 50% புரொப்பேன் (Propane) மற்றும் 50% பியூட்டேன் (Butane) என மாற்றினால் வாயு கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மொறட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். .

அண்மைய எரிவாயு தொடர்பான வெடிப்புகளுக்கு இதுவே வெளிப்படையாகக் காரணம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நாடாளுமன்றத்தில் இன்று கூடிய அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இந்த விடயங்களை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எரிவாயு கலவையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது எரிவாயு சிலிண்டரின் ரெகுலேட்டர் அல்லது குழாயில் இருந்து கசிவு ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்ததாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நிறுவனத்தின் அறிக்கைகள் வேறுவிதமாக கூறும்போது சில அறிக்கைகளில் எரிவாயு கலவை 50:50 ஆகவும், 30:70 கலவையை காட்டுவது ஏன் என்பது மர்மமாக இருப்பதாக லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

லாப்ஸ் காஸ் பி.எல்.சியின் தலைவர், எரிவாயு கலவையில் பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் அல்லது ரெகுலேட்டர் அல்லது குழாயில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டால், எத்தில் மெர்காப்டன்தான் Ethyl Mercaptan கடுமையான வாசனையை தருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான தகவல்கள் காணவில்லை என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்