Tue. May 14th, 2024

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன அனுமதி பாத்திரம் நீக்கம் -சஜித் உறுதி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி பத்திரத்தை நீக்கப்போவதாக கூறியுள்ளார்

மாத்தறை டிக்வெல்லா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்த வாக்குறுதியை அளித்தார்.

“நாங்கள் நாட்டை ஆளக்கூடாது, மாறாக சேவை செய்ய வேண்டும். நாங்கள் அரசியல் செய்யக்கூடாது, ஆனால் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் ”என்று பிரேமதாச கூறினார், பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்வை இல்லாத வாகன அனுமதிகளை ரத்து செய்வதிலிருந்து சேமிக்கப்பட்ட பணத்தை சிறந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை வலியுறுத்தினார்.

நாட்டின் அனைத்து வளங்களையும் சாமானிய மக்களுக்கு வழங்கும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதாக அவர் உறுதிமொழி அளித்தார்.

பிரேமதாச, தேர்ந்தெடுக்கப்பட்டால், பல தசாப்தங்களாக தேசிய வளங்கள் மற்றும் பொது சொத்துக்கள் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவந்தது நிறுத்தப்பட்டு , அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும்வகையில் தாய்நாட்டை வளர்ச்சியுள்ள சொர்க்கபுரியாக மாற்றுவேன் என்றும் குறிப்பிட்டார்.

இதே நேரத்தில் பாராளுமனற உறுப்பினர்களின் எணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையிலான அரச அதிகாரிகளுக்கு வழங்குவதாலேயே நிறைய பணம் வீணடிக்கப்படுவதாகவும் இதனை சஜித் நிறுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்