Thu. May 16th, 2024

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் உயர்த்தப்படும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.நாயக்க ராமநாயக்க தெரிவித்த நிலையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அடுத்து பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் நிர்ணயித்த விலையை விட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபா அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பாண் உட்பட வெதுப்பாக உணவுகளின் விலைகளை அதிகரிக்க வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது. இதனடிப்படையில் பாணின் விலை ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை நேற்று உறுதியளித்துள்ளது. இதன் காரணமாக பாண் உட்பட வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது எனவும், இதன் காரணமாகவே விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்