Fri. May 17th, 2024

பருத்தித்துறை திரையரங்கிற்கு சீல்

அறிவுறுத்தல்களையும் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய திரையரங்கிற்கு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவால் இன்று  சீல் வைக்கப்பட்டது.
பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு பருத்தித்துறை சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான குழுவினரால் பருத்தித்துறை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சற்று முன்னர்  சீல் வைக்கப்பட்டது.
பருத்தித்துறைப்பகுதியில் அண்மையில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த இருபத்தைந்துக்கு மேற்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுக் காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான பிசிஆர் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் திங்கள் கிழமை வரை திரையரங்கை பருத்தித்துறையில் திறக்கவேண்டாமென மாகாண சுகாதார பணிப்பாளரின் ஆலோசனைபெற்று பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியாலும் பொதுசுகாதார பரிசோதகராலும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி நேற்று சனிக்கிழமை  இரவு 9.30 காட்சி நடத்தப்பட்டுள்ளதோடு அங்கு சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவான மக்களை ஆபத்தான நிலையில் ஒன்றுகூட இடமளித்ததாலேயே திரையரங்கு சீல் வைக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திரையரங்கில் மக்கள் கூடியுள்ளமை குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுமிருந்தன.
இதுதொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை பொலிஸாரின் முன்னிலையில் திரையரங்கிற்கு சீல் வைத்ததோடு இதுதொடர்பான கடிதங்களையும் சம்மந்தப்பட்ட தரப்பினர் மற்றும் மாகாணப் பணிப்பாளருக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் மக்கள் கூடும் விதமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் கொரோனா பரவலை தீவிரப்படுத்தும் எனவும் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்