Sat. May 18th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஆதாரம் நூல் வெளியீட்டு விழா

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் “ஆதாரம்” நூல் வெளியீடு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு  நெல்லியடி தடங்கன் புளியடி முருக மூர்த்தி ஆலயத்தின் மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் பா.செந்தில்நந்தன், சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், கெளரவ விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலக செயலர் ஈ.தயாரூபன், யாழ்ப்பாணம் செலான் வங்கி முகாமையாளர் மு.குணேந்திரா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்