Fri. May 17th, 2024

பயணிகளின் வசதி கருதி 2000 புதிய பஸ்கள் இறக்குமதி செய்ய அமைச்சு முடிவு

பொது போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்த 2,000 பேருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள உயரம் குறைந்த மிதி பலகைகள் கொண்ட பேருந்துகளை இறக்குமதி செய்ய 1,750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயணிக்கும் பேருந்துகள் பயணிகளின் வசதி அல்லது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதில்லை, இதனால் அவர்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக, பயணத்திற்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான பேருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த பேருந்துகள் இலங்கை போக்குவரத்துக்கு சபையிடம் கையளிக்கப்படும் என்றும் தெரியவருகிறது .
இவற்றில் பல பேருந்துகள் தற்போது கொழும்பு, மகரகம மற்றும் வேறு சில நகர்ப்புறங்களில் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்