Sun. May 19th, 2024

பயணத்தடையிலும் வாடகை அறவீடு வர்த்தகர்கள் விசனம்

பயணத்தடை காலத்தில் வர்த்தக நிலையங்களுக்கான வாடகைகள் அறவிடுவதை தவிர்க்குமாறு நெல்லியடி வர்த்தகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரவெட்டி பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட நெல்லியடி பொதுச் சந்தை வர்த்தக நிலைய உரிமையாளர்களே இவ்வாறு  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாண்டு பயணத் தடை மற்றும் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் பொதுச் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாபார நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட காசோலைகள் பலவும் திரும்பியுள்ளது. இவ்வாறு பொருளாதார ரீதியாக தாம் பதிக்கப்பட்ட போதிலும் கரவெட்டி பிரதேச சபை எமது கஸ்ட்டங்களை கருத்தில் கொள்ளாது வாடகைப் பணத்தை வசூலிப்பது பெரும் வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை பயணத் தடை காலத்தில் வடமராட்சியில் உள்ள ஏனைய பிரதேச சபைகளால் வாடகைகள் அறவிப்படாத போதிலும் கரவெட்டி பிரதேச சபையால் நெல்லியடி வர்த்தக நிலையங்களில் வாடகை அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இம்முறையாவது தமக்குரிய வாடகையை வசூலிப்பதை தவிர்க்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்