Fri. May 17th, 2024

பன்னை வெட்டுவான் கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் சீலன்.

பன்னை வெட்டுவான் கிராம மக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்திற்காக சகல அனுமதியுடனும் மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மகக்ளின் வபழ்வாதாரத்தில் கைவைக்கும் வகையில் சக பிரதேச சபை உறுப்பினர் செயற்படுவதாக நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஏ.றொஜர் ஸ்ராலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஏ.றொஜர் ஸ்ராலின் ஊடகங்களுக்கு இன்று(22) கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் பன்னை வெட்டுவான் கிராம மக்களின் வேண்டு கோளுக்கு அமைவாக எனது முயற்சியில் புவி சரீதவியல் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அனுமதியுடன் மணல் அகழ்வு பத்திரம் ஒன்றை பன்னை வெட்டுவான் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளேன்.
குறித்த கிராம மக்களே பயணடைந்து வருகின்றனர்.மண் அகழ்வினால் கிடைக்கப்பெற்ற நிதியில் குறித்த கிராமத்தில் உள்ள கோயிலுக்கும் வழங்கி வந்துள்ளோம்.
நான் மக்களுக்கு செய்கின்ற உதவிகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நானாட்டான் பிரதேச சபையின் சக உறுப்பினர் ஜீ.எம்.சீலன் எங்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
கடந்த 20 ஆம் திகதி பன்னை வெட்டுவான் பகுதியில் சகல அனுமதியுடனும் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த டிப்பர் வாகனத்தை இடை மறித்து தர்க்கத்தில் ஈடுபட்டார்.
ஆனால் பன்னை வெட்டுவான் கிராம மக்கள் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபடவில்லை.
அக்கிராம மக்கள் பயணடைவதற்காக அக்கிராம மக்களின் விருப்பத்துடன் மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரம் வழங்கி இருந்தேன்.
எனவே நானாட்டான் பிரதேச சபையின் சக உறுப்பினர் ஜீ.எம்.சீலனின் அடாவடித் தனத்திற்கு அக்கிராம மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்