Sun. May 12th, 2024

நெல்லியடி நகரத்தை சுத்தப்படுத்தும் கரவெட்டி பிரதேச சபை

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஐங்கரன் அவர்கள் புதன்கிழமை நெல்லியடி நகரம் மற்றும் பஸ் நிலையத்தை துப்பரவு செய்யும் பணியில் கவனம் செலுத்தி இருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சிதம்பரத்தின் சிலைக்கு அருகாமையிலுள்ள குப்பைகள்  மற்றும் மிதிவண்டிகள் சகலதையும் அகற்றி இருந்தார்.  டெங்கு நோய் வருவதற்கு தடுப்பதற்காக  கான் வாய்க்கால்களுக்கு  புகையை ஊட்டி டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கான முயற்சியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களை ஈடுபட வைத்து   நேரடி கவனம் செலுத்திஇருந்தார்.  மலசலகூடம் இருக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்பொழுது  நகரப் பகுதியின் சுத்தம் பேணுவதில் கவனம் செலுத்தியுள்ளார். நெல்லியடி புதிய சந்தை பகுதிக்கும் மாபிள் கற்கள் பதிப்பதற்காக ஒப்பந்ததாரரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  பிரதேச சபை தற்பொழுது கவனம் செலுத்துவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக கரவெட்டி பிரதேச சபையின் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், நியூஸ் தமிழ் இணையதளத்திலும் இது தொடர்பான செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் பிரதேச சபையின் இந்த செயல்பாடு பாரிய ஒரு மாற்றமாக பார்க்கப்படுகிறது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்