Fri. May 17th, 2024

நாளை முதல் பாணின் விலை 5/= வால் அதிகரிப்பு

நாளை முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேக்கரி உற்பத்தி பொருட்களின் , மூலப்பொருட்களான போதுமை மா சீனி, தேங்காய் எண்ணெய், மாஜாரின் போன்றவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்ததின் காரணத்தினால் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு பேக்கரி உரிமையாளர் சங்கத்தினரால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தப்பட்டது

இதனையடுத்து  நாளை ( 01.09.2021 ) தொடக்கம் ஒரு இராத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  எதிர்காலத்தில் மூலப்பொருட்களின் விலை குறைவடையும் பட்சத்தில் மீண்டும் பழைய விலைக்கு விற்பதற்கும் தீர்மானித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இடத்திற்கு இடம் பணிஸ் வகைகளின் விலைகளில் வேறுபட்டு விற்பனை செய்வதால் உற்பத்தியாளர்களும், பாவனையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர் . தற்போதைய பயணத் தடைக் காலத்தில் பாவனையாளரின் நன்மை கருதியும் விலை மாறுபாட்டைத் தடுக்கும் முகமாகவும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் ( பணிஸ் வகைகள் ) ஆகக் கூடிய சில்லறை விற்பனை விலையாக
ரீ பணிஸ், கொம்பு பணிஸ், பேஸ்ரி, சங்கிலி பணிஸ், ஜாம் பணிஸ், கறி பணிஸ் முக்கோண பணிஸ் என்பன 40 ரூபாயாகவும், கிறீம் பணிஸ் 50ரூபாவாகவும், அடைக் கேக் 30 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்