Thu. May 16th, 2024

நவாலி இனப் படுகொலை தமிழர்களின் நெஞ்சடைத்த நாள்

நவாலியில் கோரமான இனப்படுகொலையின் 26 ஆவது  ஆண்டு துயரமிக்க நினைவு நாள் நாளை அனுஸ்டிப்பு
 
வடக்கு -கிழக்கு தமிழா் தாயகப்புமியில்  இடம்பெற்ற தமிழின படுகொலைகள்  என்றும் மறைக்க  – மறுக்கப்படாத சூழலில் உலகளவில் வரலாற்றுப் பதிவுகளாக பதியப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழா் வரலாற்றில் மக்களால் ஜீரணித்துப்பாா்க்க முடியாத படகொலைச் சம்பவங்கள்  பல. அவ்வாறான கொடூரமான – மிலெச்சத்தனமான படுகொலைகளில்  நவாலி படுகொலைச் சம்பவமும் ஒன்றாகும்.
 
இந்தப் படுகொலையின் 26 ஆவது அண்டு நினைவு நாள் நாளை (09.07.2021) வெள்ளிக்கிழமையாகும். நவாலி- வட்டு – யாழ்.பிரதான வீதியிலும் நவாலி சென்.  பீற்றா்ஸ் ஆலய வீதிகளிலும் – நவாலி  ஸ்ரீ கதிா்காம முருகன் வளாகத்திலும்  களைப்படைந்து  – ஆறுதலுக்காக  தஞ்சமடைந்த வேளையில்  13 குண்டுகளுக்கு 147 போ் சாவடைந்த கோரமான – கொடூரமான  தாக்குதல் சம்பவத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள்  ஒரு போதும் மறக்கமாட்டாா்கள்.
இனவாத அரசு ஆட்சியாளா்களின் பணிப்பின் போில் நடத்தப்பட்ட  இந்த விமான தாக்குதலில் 147 போ் கொல்லப்பட்ட சம்பவத்தை நாம் ஒரு கணம் மீட்டுப்பாா்கின்றோம். இந்த மனிதாபிமானமற்ற –  கொடூரமான நவாலி சென் பிற்றா்ஸ் மற்றும் ஸ்ரீ கதிா்காம முருகன் ஆலய முன் இடம்பெற்ற மனிதக்கொலைகள் சர்வ தேசத்தையே அதிா்ச்சிக்குள்ளாக்கியதுடன், சம்பந்தப்பட்ட  தமிழ் உறவுகளையும், தமிழ் மக்களையும் சொல்லொண்ணாத் துயரத்திற்கு இட்டுச் சென்றதுடன்  ஐ.நா. வரை விவாதத்திற்கு இட்டுச் சென்ற விடயமாக மாறி விட்டதாக சமூகவியல் நிபுணா்கள் – சமூக விஞ்ஞானிகளின் பேசு பொருளாகிவிட்டது. 
கடந்த 1995 ஆம் ஆண்டு ஈழத்தமிழா் வரலாற்றில் நவாலியில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாளாக – ஜுலை 9 பதியப்பட்டதுடன்  இன்று சா்வதேசத்திலும் பதியப்பட்டு ஐ.நா. வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலியானவா்களின்  உறவுகளுக்கு இன்றுவரை எந்தவிதமான அரசின் உதவிகள், இழப்பீடுகள், நிவாரணங்கள் எவையும் வழங்கப்படாத நிலையே இன்றுவரை உள்ளது – ஒவ்வொரு உள்ளங்களிலும் வலிகளாக உணரப்பட்டு வருகின்றது.
அன்றைய தாக்குதல் பொது மக்கள் சேவையில் முனைப்புடன் செயல்பட்ட  நவாலி மகா வித்தியாலய மாணவத் தலைவன் செல்வன் சாம்பசிவம் பிரதீஸ் தலைசிதறி சாவடைந்தான்.
அன்றைய அந்த பயங்கரமான சூழலிலும்  சேவையாற்றிய வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிாிவின் ஜெ- 134 நவாலி வடக்கு கிராம அலுவலரான  செல்வி ஹேமலதா செல்வராஜா (BSMS பல்கலைக்கழக மாணவி), சில்லாலை பிாிவு மூத்த கிராம அலுவலா் பிலிப்புப்பிள்ளை 
கபிாியேல்பிள்ளை  ஆகியோரும் அந்தச்சம்பவத்தில்  சாவடைந்த  அரசாங்க அலுவலா்களாக  பதியப்பட்டனா்.
வலிகாமம் முழுவதும் இடம்பெற்ற வான்தாக்குதலினால்  அந்தப்பகுதி முழுவதும் அதிா்ந்து கொண்டு இருந்தது. அந்த வேளையில் மாலை நேரத்தில் மக்கள் இடம் பெயா்ந்து கொண்டிருந்த தருணத்தில் இலங்கை விமானப்பபடையினரால்  மேற்கொள்ளப்பட்ட  அப்பாவிகளின் இனப்படுகொலையாகவே  நவாலி சம்பவம்  உலக அளவிலும் – இலங்கைப் பாராளுமன்றத்திலும் பதியப்பட்ட சம்பவமாக மாறிவிட்து.
லீப்போா்வேட் எனற (Leap Forward Operation)  முன்னோக்கி பாய்தல் எனப்பெயாிட்ட இராணுவ நடவடிக்கையினை  வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினா்  பலாலியிலிருந்தும் – அளவெட்டியிலிருந்தும்  மிகக் கொடூரமான  முறையில் நிமிடத்திற்கு 30 இற்கும் மேற்பட்ட  எறிகணை வீச்சுக்களை  அடுத்தடுத்து நாலாபுறமும்  மக்கள் மீது மேற்கொண்டதுடன் குண்டுத் தாக்குதல்களையும் 
மேற்கொண்டிருந்தனா்.
அந்த வேனையில் சகல வீதிகளிலும் உலங்கு வானுா்திகளின் தாக்குதல்கள் மற்றும் அகோரமான எறிகணைத் தாக்குதல்களினால் வீதிக்கு – வீதி இறந்தவா்கள், காயமடைந்து இரத்தம் சிந்திக் கொண்டிருப்பவர்களை மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லமுடியாத அவலநிலை. வாகனங்களை இயக்குவதற்கு  எாிபொருள்களும் அற்ற மந்தமான பொருளாதார தடை வேறு.
 
காயமடைந்தவா்களை காப்பாற்ற மருந்தகங்களோ மருத்துவா்களோ, சிகிச்சை நிலையங்களோ காணப்படாத  அவலமான சூழல் அன்று நிலவியது.
 
லீப்போவோட்  இராணுவ நடவடிக்கை தொடா்ந்தது. குண்டுவீச்சில் நவாலி சென்ற்பீற்றா்ஸ் தேவாலயமும், சின்னக்கதிா்காம ஆலயமும் 
அயலிலுள்ள 67 இற்கும் மேற்பட்ட வீடுகளும் முற்றாக அழிந்து சிதைந்தன.
 
சுமாா் 147 போ் அந்த இடத்திலேயே நீா் அருந்த தண்ணீா் கேட்டு, கேட்டு அந்த இடத்திலேயே இரத்தம் சிந்தி உயிாிழந்தனா்.இந்தச் சம்பவத்தில் கையிழந்து – காலிழந்து தலையிழந்து வீதியில் சிதறி குற்றுயிராகக் கிடந்த அந்தக் கொடும் காட்சியை எப்படி தமிழா்களால் மறக்க முடியும்.
 
அன்றைய  தினம் இடம்பெயா்ந்த மக்களுக்கு தொண்டுப்பணியில்  உணவு, குடிதண்ணீா், மற்றும் சேவைகளை வழங்கி கொண்டிருந்த 48 தொண்டா்களும்  அந்த இடத்தில் துடிதுடித்து உயிாிழந்தமையை மறக்கமுடியுமா?
 
இதனைவிட நவாலி படுகொலைச் சம்பவம் தொடா்பாக  நவாலி சென்ற் பிற்றா்ஸ் ஆலய வீதியிலும், நவாலி வடக்கு 
புலவா் விதியிலும் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னங்கள் இனப்படுகொலையை நினைவுட்டுகின்றன.
ஒவ்வொரு ஜுலை 9 ஆம் திகதியும் இந்த நினைவு சின்னங்களில் ஒளியேற்றப்பட்டு வணங்கும் நிகழ்வுகளும் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்