Sun. May 19th, 2024

நவம்பர் மாதத்தில் மட்டும் 13,000 கோடி ரூபாயை அச்சடித்த கோத்தபாய அரசு

இலங்கை அரசாங்கம் பணதட்டுப்பாட்டை ஈடு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 13 ஆயிரம் கோடி ரூபாயை மதியவங்கி மூலம் அச்சடித்து வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நவம்பர் 1 தொடக்கம் டிசம்பர் 1 வரையான காலப்பகுதியில் இந்த பணம் அச்சடிக்க பட்டுள்ளதாக மதியவங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
நவம்பர் 1 ஆம்திகதி மதியவங்கியில் 488.17 பில்லியன் பணமுறிகள் இருந்ததாகவும் இது டிசம்பர் 1 ஆம் திகதி 129.5 பில்லியன் ரூபாயில் அதிகரித்து டிசம்பர் 1 ஆம் திகதி 618.12 பில்லியன் ஆக இருந்துள்ளது. இதன் மூலம் 129.5 பில்லியன் ரூபாய் பணம் ( 13,000 கோடி ) அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனாலேயே இலங்கை பணத்தின் பெறுமதி சமீபத்தில் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் பணம் அச்சடிப்பு தொடருமானால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை பலமடங்கு உயரும் என்று பொருளியலாளர்கள் எதிர்வு கூறுகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்