Fri. May 17th, 2024

தொழில் நுட்ப வசதி இல்லாத மாணவர்கள் கல்வியில் இருந்து இடை விலகும் நிலை

தொழில்நுட்ப வசதி இல்லாத மாணவர்கள் கல்வியில் இருந்து இடை விலகும் நிலை உருவாகியுள்ளதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியசங்கத் தலைவர் ப தர்மகுமாரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தாக்கத்தினால் பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான கல்வியை வடமாகாண கல்வித் தினணக்களம்  நேரடியாகவும் வலயங்களின் மூலமும் கல்வியை கணினி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி மூலம் வழங்கி வருகின்றது. இதனை வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன். இருந்த போதும் எந்த வசதியும் இல்லாத 20 வீதமான மாணவர்கள் கல்வியை இழக்கும் நிலையில் உள்ளனர். இதனை நிவர்த்தி செய்ய சில பாடசாலை அதிபர்கள் தற்த்துணிவாக பாடசாலையின் அன்றாட செலவீன பணத்தையும் ஏனைய தரஉள்ளீட்டு பணத்தையும் பாவித்து வசதி குறைந்த மாணவர்களின் கல்வியை சரிவில் இருந்து பாதுகாக்கின்றனர். ஆனால் சில அதிபர்கள் சுற்றறிக்கை அதற்கு இடமளிக்காது என காத்திருக்கின்றனர். எனவே வலிந்து பாடசாலையில் கல்வியை தொடர்ந்த மாணவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தை தமது கையில் எடுத்து தொழிலுக்கு செல்கின்றனர். இதனால் கல்வியை இடையே கைவிடும் சூழல் இதனைக்கருத்தில் கொண்டு உதவி வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்