Sun. May 19th, 2024

தேவையான அளவு இயற்கை உணவை உண்டால் சத்து மாப் பேணிகள் தேவையில்லை 

எமது சொந்த மண்ணில் உற்பத்தியாகும் ஆரோக்கியமான,இயற்கையான உணவுப்பொருட்களை தேவையான அளவு உண்டுவந்தால்  சத்துமாப் பேணிகள் தேவையில்லை என வைத்தியர் சிவசுதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தீட்டாத அரிசிமா, ஊர்க்கோழி முட்டை, மீன்,   உடன் பசும்பால், மோர், விளாம்பழம், கொய்யாப்பழம், முருங்கை இலை, வல்லாரை, தவசி முருங்கை, அகத்திப்பூ, தேசிக்காய், ஒடியல், இராசவள்ளி, இளநீர், இளநீரின்வழுக்கல், நுங்கு போன்ற பல அற்புதமான உணவு வகைகள் எமதூ நாட்டிலேயே அதிகளவில் உள்ளது. நாம் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறோம்.இவற்றை ஒழுங்காக பாவித்து வருவோமாக இருந்தால் சத்துமாப் பேணிகளோ விற்றமின் குளிசைகளோ பாவிக்க வேண்டிய தேவை இருக்காது. அத்துடன் எமது உள்ளூர் உற்பத்தி பெருகி எமது சூழல் வளம்பெறும் என்று குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்