Fri. May 17th, 2024

தேசிய மட்ட 100 மீற்ரர் ஓட்டத்தில் அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கம்

விசேட தேவையுடையோருக்கான தேசிய மட்ட 100 மீற்ரர் ஓட்டத்தில் அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவன் செல்லக்குமார் பவித்திரன்  வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விசேட தேவையுடையோருக்கான தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 12 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான 100 மீற்ரர் ஓட்டத்தில்  அச்சுவேலி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த செல்லக்குமார் பவித்திரன் வெள்ளிப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் நான்காமிடத்தையும் பெற்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்