Wed. May 15th, 2024

தேசிய கடற்கரை கரப்பந்தாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி சாதிப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் நிகம்பு கடற்கரை மைதானத்தில் இன்று  நடைபெற்றது.
இதில் 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 3ம் இடத்திற்கான போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி  அணியை எதிர்த்து மரியஸ்ரெலா மகா வித்தியாலய அணி மோதியது. இரு அணிகளும் ஒன்றுகொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் விளையாடினர்.  இதில் பலத்த போராட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்