Mon. May 13th, 2024

திருமணத்திற்கு தயாராகும் லட்சுமி மேனன்

கும்கி, சுந்தரபாண்டியன்,  கொம்பன்,  றெக்கை படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட லட்சுமி மேனன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரியவந்துள்ளது.
22 வயதைக் கொண்ட லட்சுமி மேனன் கும்கி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சுந்தரபாண்டியன் படமும் வெற்றி பெற ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். அதன் பின்னர் கார்த்தியுடன் கொம்பன் மற்றும் றெக்கை படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் படிப்பில் கவனம் செலுத்துவதால் உடல் நிறையும் அதிகரித்துள்ளது. இதனால் திருமணத்திற்கு பெற்றோருக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்