Fri. May 17th, 2024

தியாகி அறக்கட்டளையின் முன்மாதிரியான செயல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினரில் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தால் பிரேதப் பெட்டி மற்றும் போக்குவரத்து தொடர்பான செலவீனங்களை தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இச்செயற்பாடு இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும்
கொவிட் தொற்றாளர் ஒருவர் சில சமயங்களில் வீட்டில் இறந்தால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போக்குவரத்து செலவீனங்களையும் மற்றும் அவரின் இறுதி அடக்கத்திற்கு தேவையான பிரேதப் பெட்டிக்கான செலவீனங்களையும் தியாகி அறக்கட்டளை நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்