Fri. May 17th, 2024

திட்டமிடாமல் வீட்டு திட்டங்களை சஜித் பிரேமதாஸ நடைமுறைப் படுத்தினார்- கதர் மஸ்தான் 

ஜனாதிபதி வேட்பாளராக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே திட்டமிடாமல் வீட்டுத் திட்டங்களை வழங்கி தற்போது மக்களை சிரமத்திற்கு சஜித் பிரேமதாசா உள்ளாக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  குற்றம் சுமத்தியுள்ளார்.
 இன்று வியாழக்கிழமை (16) மாலை மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள அவருடைய  அலுவலகத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு   கருத்து தெரிவித்த  போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக தொடர்சியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாடியுள்ளோம். வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கியிருந்த நிதியை விட அரசியல் நோக்கத்கிற்காக கண்ட படி வீட்டு திட்டங்களை கொடுத்துள்ளனர்.
 திட்டமிடல் இல்லாத செயற்பாடுகளால் தான் மக்களை தற்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
புதிய அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கான இவ் நிதியை வழங்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கின்றோம். உயர் மட்டத்திடமும் பிரதமரிடமும் ராஜாங்க அமைச்சரிடமும் பேசியுள்ளோம்.
அவர்கள் விரைவில் ஒரு குழுவை எமது பகுதிக்கு அனுப்பி மாவட்ட ரீதியில் வழங்கபட வேண்டிய நிதிகள் தொடர்பாக அறிக்கையை சமர்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் ஆளும் கட்சி என்ற வகையில் மக்கள் எதிர் கொண்டுள்ள இப்பிரச்சினையை நிவர்தி செய்வது எமது பொறுப்பு என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான நிதியை பெற்று கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
விரைவில் அவர்களுக்குரிய நிதியை பெற்று கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடை முறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்