Fri. May 17th, 2024

கரவெட்டி வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை, நோயாளர்கள் அவதி

கரவெட்டி பிரதேச அம்பம் வைத்தியசாலையில்  பெருமளவு  நோயாளிகள்  செல்வதினால் வைத்தியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றது. மூன்று வைத்தியர்களில் ஒரு வைத்தியர் மேல் மாடியில் உள்ள கிளினிக் பார்வை இடும் நிலையில் ஒரு வைத்தியர் கிராமங்களுக்கு சென்று விடுவார். வெளிநோயாளர்களை ஒரே ஒரு வைத்தியர் பார்வையிடுகிறார். நோயாளிகள் அதிகமாக வருவதனால் அதிகநேரமாக காவல் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.  நோயாளிகள் 3-4 மணித்தியாலங்கள் காவல் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சிற்று ஊழியர்கள் நோயாளர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதுடன் வைத்திய வேலைப்பளுவினால் பொதுமக்களுடன் சீறி  பாய்கின்றார்கள். வயது வந்தவர்கள் மற்றும்  குழந்தைகளுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை. நோயாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் நம்பர்களை பெற்று  வேகு நேரமாக காத்து நின்று பொறுமை தாங்காமல் திரும்பி போகின்றார்கள். அரச வைத்தியசாலையில் வறுமையில் உள்ள மக்கள்தான் மருந்து எடுக்க செல்வது வழமை.  போதியளவு வைத்தியர்களை அங்கு கடமைக்கு அமர்த்த சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுவதுடன், யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கயன் ராமநாதன் அவர்கள் இதனை தீர்த்து வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்