Sat. May 18th, 2024

திங்கள் முதல் தபால் நிலையம் வரும்பொழுது பேனாக்கள் கொண்டுவர கோரிக்கை

எதிர்வரும் திங்கள்கிழமை (4) முதல் தபால் நிலையங்களுக்குச் செல்லும்போது தொடர்புடைய ஆவணங்களில் கையெழுத்திட ஒரு பேனாவை கொண்டு வருமாறு தபால் மாஅதிபர் ரஞ்சித் அரியரத்ன மக்களைக் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் திங்கள் முதல் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக திங்கள்கிழமை திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும், கருது தெரிவித்த அவர் மக்கள் முகமூடி அணியவும், அரசு வழங்கிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டார்.

“COVID-19 வைரஸ் பரவுவதால் எந்த தபால் நிலையங்களிலிருந்தும் பேனாக்கள் வழங்கப்படாது,” என்று அவர் கூறினார்.

திங்களன்று தபால் நிலையங்கள் திறக்கப்பட்டதும், பொது உதவி நிதி செலுத்துதல், மூத்த குடிமக்களின் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் தபால் நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும், என்றார்.

“முன்னதாக, தபால் நிலையங்கள் மக்களிடமிருந்து கையொப்பங்களைப் பெறுவதற்கு ஒரே ஒரு ஆவணத்தை மட்டுமே பயன்படுத்தின, ஆனால் மக்களின் கையொப்பங்களைப் பெறுவதற்கு நாங்கள் தனி படிவங்களை ஏற்பாடு செய்துள்ளோம்” என்று திரு அரியரத்ன கூறினார்.

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் மற்றும் தபால் நிலையத்திற்குச் செல்லும்போது ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும் என்று அவர் கண்டிப்பாக அறிவுறுத்தினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்