Tue. May 14th, 2024

சீவல் தொழிலார்களை சுரண்டும் பனை தென்னைவள கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர்

26.04.2020 இன்று தொடக்கம் சீவல் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 3000 ரூபா வீதம் கட்டுமாறு பனை தென்னைவள கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர் உத்தரவிட்டுள்ளார். கரவெட்டி நெல்லியடி சீவல் தொழிலாளர்கள் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  இருப்பதினால் தவறணைகளில் கொடுக்க முடியாத நிலையில் வீட்டில் வைத்து விற்பனை செய்கின்றார்கள். கரவெட்டி நெல்லியடி பனை தென்னைவள முகாமையாளர் சீவல் தொழில் செய்பவர்கள் ஒவ்வொருநாளும் 3000 ரூபா கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் போலீசாரும் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களும் தங்களுடைய வீடுகளில் வந்து பிடிப்பார்கள் என்று வீடு வீடாக சென்று அச்சுறுத்தி உள்ளார்.  தங்களுடைய உத்தியோகஸ்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இக்கட்டான நிலைக்கு தங்கள் வந்ததாக முகாமையாளர் தெரிவித்தார்.  சீவல் தொழிலாளர்கள் உடைய கள்ளை  பெற்று அவர்கள் உரிய சம்பளத்தை ஒழுங்கு முறையில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அதை நடைமுறை செய்யமுடியாத நிலையில் சிவல் தொழிலாளர்களை சுரண்ட முற்படுவது எந்தவகையில் நியாயம் என்று சீவல் தொழிலார்கள் குமுறுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் கட்டக் கூடிய நிலையில் இல்லை. அவர்களுக்கான மாற்று வழிமுறையை செய்து அவர்களுடைய கள்ளை  பெற்று அவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்குவதற்கான நடைமுறையை செய்து கொடுக்க வேண்டுமென அங்கத்தவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். அரசாங்கத்திற்கு தெரியாமல் புதிய சட்டங்களை இயற்றி மக்களை வதைக்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டாம் என சீவல் தொழிலாளர்கள் கேட்டுகொள்கின்றர்கள்.

தற்போது சீவல் தொழிலார்களால் எடுக்கப்படும் கள் வீடுகளில் விற்கப்பட்டு மேலதிகமானவை அநியாயமாக ஊத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்