Thu. May 16th, 2024

சீனா வருமாறு கோதாவுக்கு தூதுவர் அழைப்பு

நேற்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவை சந்தித்த சீனத் தூதர் செங் சூயுவான், பரஸ்பர வசதியான நேரத்தில் சீனாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் என்று செய்தித் சீனா தூதுவராலய செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சீன தூதவர் தலைமையில் சென்ற தூதரக தூதுக்குழுவில் மிஷன் துணைத் தலைவர் ஹு வீ, அரசியல் தலைவர் லூ சோங் மற்றும் இரண்டாவது செயலாளர் லியாங் ஜிஜுன் ஆகியோரும் அடங்கி இருந்தனர் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியதாக தெரியவருகிறது
பரஸ்பரம் வசதியான நேரத்தில் சீனாவுக்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார் . இந்த சந்திப்பு ஒரு சுமுகமாக இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது முதல் வெளிநாட்டு பயணத்தை நவம்பர் 29 அன்று இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்