Sun. May 19th, 2024

சிரேஷ்ட பிரிவு பெண்களுக்கான 800 m கொழும்புத்துறை இ.ம.வி.தங்கம்

சிரேஷ்ட பிரிவு பெண்களிற்கான 800 மீற்ரர் ஓட்டத்தில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி.வித்தியகலா தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிரேஷ்ட பிரிவுப் பெண்களிற்கான 800 மீற்ரர் ஓட்டத்தில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. வித்தியகலா தங்கப் பதக்கத்தையும்,  யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வி.ஜி.கிருஷாந்தி வெள்ளிப் பதக்கத்தையும்,  புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியைச் சேர்ந்த ரி.பூமிகா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்