Fri. May 17th, 2024

சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவே எம்.ஏ.சுமந்திரன் விடுதலை போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை கூறுகிறார்

சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி சிங்கள மக்களை திருப்திப் படுத்துவதற்காகவே  எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் போராட்ட அரசியலுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வருகிறார் என தமிழரசு கட்சியின் இளைஞர் அணி உப தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.டினேஸன் தெரிவித்துள்ளார்.

சுமத்திரனின் தொடர்சியான சர்சைக்குறிய கருத்துக்கள் தொடர்பாக இன்று புதன் கிழமை மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-சுமந்திரனின் இவ்வாறான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் ஆகிய நாம் அதிர்ச்சி அடைய தேவையில்லை. ஏன் என்றால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தமிழ் மக்களின் போரட்டங்களை கொச்சைப் படுத்துவதையும் விமர்சிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனாலும் இம் மாதம் 18 ஆம் திகதி முள்ளி வாய்கால் படுகொலை நிகழ்வை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூற இருக்கின்ற இந்த நிலையில் அவர் இவ்வாறான கருத்துக்களை கூறியுள்ளது தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தேசிய வாதிகள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் என்றால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்சியாக தமிழரின் போராட்டத்தை கொச்சைப் படுத்தி வருகின்றார்.
 இதனால் தமிழர்களின் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உட்பட்டதாகவும் தமிழர்களின் போரட்டத்தை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கும் கொண்டு சென்று விடுகின்றது.
சுமந்திரன்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்களின் பிரதி நிதிகளை கொண்ட ஒரு கட்சி.
 ஆகவே சுமந்திரனின் கருத்து ஒட்டு மொத்த தமிழர்களின் கருத்தாகவே கருதப்படுகின்றது.
சுமந்திரனின் நேர்காணல் ஒரு சிங்கள ஊடகத்திற்கு வழங்கப்பட்ட நேர்காணல்.
 எனவே குறித்த நேர்காணல் அனேக சிங்களவர்கள் காணக் கூடிய வாய்ப்பு உள்ளது.
 இவ்வாறான நேர்காணல்கள் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பான நேர் மறையான கருத்துகள் எம்மிடமே உள்ளது என கருத கூடிய வாய்புக்கள் உள்ளது.
இந்த விடயத்தில் கற்றறிந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கல்வி மான் அறியாதவர் அல்ல.
 அறிந்திருந்தும்  சிங்கள மக்களை திருப்திபடுத்த வேண்டும் இலங்கையின் பெரும்பான்மை இன மக்களிடம் தன்னுடைய மேலாண்மையை காட்ட வேண்டும் தான் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமான நபராக வர வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே சிங்கள ஊடகங்களுக்கு தமிழர்களின் போராட்டங்களை விமர்சித்து கொச்சைபடுத்தும்  கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இந்த நேரத்தில் சுமந்திரனின் இவ்வாறான கருத்துகளுக்கு முழுமையாக கண்டனம் தெரிவிப்பதோடு இவ்வாறான கருத்துக்களை அவர் தொடர்சியாக முன்வைப்பாராக இருந்தால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைபின் மீது வைத்திருக்கு நம்பிக்கையை முற்ற்றாக இழக்க வைப்பதுடன் பங்காளி கட்சிகளிடையிலும் பிரிவை  ஏற்படுத்துவதாக அமையும்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் நிச்சயமாக இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 அத்துடன் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் தொடர்பாக அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பது ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாதது.
எம்.ஏ.சுமத்திரன் இனி வரும் காலங்களில் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யா விட்டாலும் பரவாயில்லை எமது போராட்ட அரசியல் எமது விடுதலை பயணத்தை பற்றி கருத்தோ கதையோ கூறாமல் இருப்பது அவர் தமிழ் மக்களுக்கு செய்யும் உதவியாக   அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்