Tue. May 21st, 2024

சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரியின் அன்பான வேண்டுகோள்;

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வீட்டிற்கு ஒருவர் வெளியே சென்று தேவை முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு திரும்புங்கள். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊரடங்கு நேரத்தில் வைத்தியசாலை,சுகாதாரப் பகுதி, பிரதேச செயலகம் உள்ளிட்ட சில திணைக்களப் பணியாளர்கள் பணி அடையாள அட்டையுடன் பணி நிமித்தம் நடமாட முடியும். விசேடமாக விவசாயிகள் மற்றும் பூசகர்களுக்கும் ஊரடங்கு நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் பூஜைக்கு தடை இல்லை. ஆனால் மக்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட அத்தியாவசியத் தேவைகள் எதுவுமின்றி அநாவசியமாக நடமாடிய ஒன்பது பேர் ஊரடங்கு தினமான சனிக்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்