Sun. May 19th, 2024

சட்டத்திற்கு மாறான கடற்றொழிலை நிறுத்து! மீனவா்கள் உணவு தவிா்ப்பு போராட்டம்.

சட்டத்திற்கு மாறான மீன்பிடியை தடுத்து நிறுத்தக்கோாி சாகும் வரையான உணவு தவிா்ப்பு போராட்டத்தை மீனவா்கள் ஆரம்பித்திருக்கின்றனா்.

திருகோணமலை திருக்கடலூரைச் சேர்ந்த வில்வராஜா ஜெயவேந்தன், மனையாவெளியைச் சேர்ந்த செலஸ்டியன் செல்வராசா, வீரநகரைச் சேர்ந்த சண்முகம் கணேஷ் ஆகிய மூவரும் இணைந்து

திருகோணமலை சிவன்கோயில் முன்றலில் இன்று காலை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில்

சட்ட விரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்துதல் என்பவற்றை நிறுத்தக்கோரியே இந்த உண்ணாவிரதம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில்,  சட்டவிரோத மீன்பிடி முற்றாக நிறுத்தப்படும் என்ற உறுதி தரப்படவேண்டும், ஜனாதிபதி, பிரதமர், கடற்தொழில் நீரியல் வள அமைச்சர், கைத்தொழில் பிரதி அமைச்சர், மாகாண ஆளுநர்,

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோர் இவ்விடயத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்து உத்தரவாதம் தரவேண்டும், இல்லையேல் நாம் சாகும்வரையான போராட்டத்தை தொடருவோம்

என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பேராட்டத்திற்கு 16 மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்