Fri. May 17th, 2024

கோவிட் நோயாளிகளை , நோயாளிகளின் டயப்பர்களை மாற்ற வைத்த தாதிகள்

பாணந்துறை வைத்தியசாலையின் கோவிட் -19 பராமரிப்பு நிலையத்தில் உள்ள பல பெண் நோயாளிகள் வயதான நோயாளிகளின் டயப்பர்களை மாற்றுமாறு வார்டு ஊழியர்கள் கேட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சுகாதார அமைச்சு விசாரணையைத் தொடங்கி உள்ளத்துடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது .

சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்தியர் ஹேமந்தா ஹெராத், மருத்துவமனை வார்டுகளில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது என்று தெரிவித்தார் . ஏனெனில் விடுதியில் அனுமதிக்கப்பட்ட அனைவருமே கவனிப்பு தேவைப்படும் COVID நோயாளிகள் என்று தெறிவித்தார்

“இந்த தொற்றுநோய்களின் போது தாதிகள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவமனை அதிகாரிகளுக்கு வேலை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. COVID நோயாளிகளை மற்ற COVID நோயாளிகளின் சுகாதாரப் தேவைகளுக்கு ஈடுபடுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

இது தொடர்பாக கொழும்பு பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த பெண் நோயாளிகள், இங்கு வந்து வேலை செய்வதிலும் பார்க்க நாங்கள் வீட்டில் ஓய்வெடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்