Tue. May 14th, 2024

கோரோனோ மரணங்களால் நிலைகுலையவுள்ள வடக்கு மாகாணம்

இலங்கையில் நேற்றைய தினம் மட்டும் 35 கோரோனோ மரணங்கள் நாட்டில் ஏற்படுள்ளநிலையில் , இது அண்ணளவாக இந்தியாவில் ஏற்படும் மரணங்களுடன் ஒத்துப்போகும் நிலையில் உள்ளது. நேற்றையதினம் மட்டும் 3591 நபர்களுக்கு கோரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது தடுப்பூசிகள் கொழும்பு, கம்பஹா , கண்டி போன்ற சிங்கள பகுதிகளிலேயே அதிகம் போடப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்ட தடுப்பூசிகள் தற்பொழுது கோரோனோ தாக்கம் அதிகமாகவுள்ள பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கே வழங்கப்படுகின்றது.
இதன்மூலம் இலங்கையில் உள்ள அனைத்து வசதிகளும் இத்தகைய மாவட்டங்களுக்கே அனுப்பப்பட்டு வருகின்றது.
கோரோனோ தாக்கம் அதிகம் ஏற்படும் பொழுது ஓக்ஸ்யென் ( உயிர்காக்கும் வாயு )க்கு அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட தட்டுப்பாடு போன்று இலங்கையிலும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அனைத்து வளங்களும் கொழும்பு மற்றும் இதர சிங்கள பகுதிகளுக்கே முன்னுரிமை அடிப்படையில் அனுப்பப்படும் பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.

இதனால் எதிர்வரும் வாரங்களில் கோரோனோ தாக்கம் அதிகம் ஏற்படவுள்ளதாக எச்சரிக்கை செய்யப்படும் நிலையில் , வடக்கு மாகாணத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டும் நிலையில் , இந்தியாவில் ஏற்பட்ட நிலை போன்று மக்கள் வீதிகளிலும், வைத்தியசாலைக்கு வெளியிலும் இறக்கும் நிலை ஏற்படும்.
இதனால் வடக்கும் கிழக்கில் உள்ள மக்கள் போராட்ட காலத்தில் எவ்வாறு ஒரு கட்டமைப்புடன் செயல்பட்டார்களோ , அதுபோன்று ஒரு கட்டுப்பாடுடன் , கண்டபடி வீதியில் திரியாது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி எமது இனத்தை இந்த நோய்த்தொற்றில் இருந்து பாத்துகாக்க உறுதியுடன் செயல்படவேண்டும்.

வீடுகளில் சிறு அளவில் செய்யும் ஒன்று கூடல்களை கூட தவிர்த்து சிலவாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் இதிலிருந்து அனைவரும் மீளவழிகிடைக்கும்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்