Tue. May 14th, 2024

கொரோனா வைத்தியசாலையாக அக்கிராயன்குளம் வைத்தியசாலை

வட மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள  அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் .
கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கிளிநொச்சி காணப்பட்ட போதிலும் அப்பகுதியில் கொரோனா தொற்று வைத்தியசாலையாக அக்கிராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்