Sat. Jun 1st, 2024

கொடிகாமம் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு கத்தி குத்து

தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இளம்பெண் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராற்றை விலக்குப்பிடிக்க முற்பட்ட வேளை மனைவியின் தங்கைக்கு கணவன் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சில காலமாக மனைவியை பிரிந்து வாழும் கணவன் நேற்று மாலை மனைவி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குவாதம் முற்றியதை அவதானித்த மனைவியின் தங்கை சமரசப்படுத்த முற்பட்ட வேளை கணவன் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்