Fri. May 17th, 2024

கால்பந்தாட்டத்தில் உடுப்பிட்டிக்கு வெண்கலம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய மட்ட கால்பந்தாட்ட தொடரில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான  தேசிய மட்ட கால்பந்தாட்ட தொடர் கொழும்பு சிற்றி மைதானத்தில் நேற்று  நடைபெற்றது.
3ம் இடத்திற்கான ஆட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து ஏழாலை ஸ்ரீ முருகன் அணி மோதியது.
இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர்.
இதனால் ஆட்ட நேரத்தில் இரு அணிகளுள் 1:1 என்ற கோல்கணக்கை பெற்று சமநிலை வகித்தனர்.  இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்