Fri. May 17th, 2024

களப்புகளை புனரமைக்கும் வேலைத் திட்டம்

நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு போன்ற பல்வேறு பகுதிகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நந்திக்கடல், நாயாறு களப்புக்கின் புனரமைப்பு பணிகளை  நடைமுறைப்படுத்துமாறும்,
யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று நடைபெற்றுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதாகவும், நந்திக்கடல் அபிவிருத்தி திட்டம் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலைமனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தி திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தாகவும் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புக்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர்  அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்