Thu. May 16th, 2024

கரவெட்டி பிரதேச செயலகத்தில் புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டம்

“புகைத்தலில் இருந்து மீண்டதோர் நாடு மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம் ” எனும் தொனிப்பொருளில்  சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரவெட்டி பிரதேச செயலகத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதுடன் சமுர்த்தி பிரிவினூடாக  நேற்று திங்கட்கிழமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மே 31 தொடக்கம் யூன் 14 வரை கொடிவார நிதி சேகரிப்பு  பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவில் இருந்தும் இரண்டு மாணவர்கள் வீதம் 70 மாணவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான  கற்றல் உபகரணங்களும்
வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் தாமாகவே முன்வந்து தமது வியாபார நிலையங்களில் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யாத வியாபாரிகள் மூவருக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ச.சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும்  உதவி பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்