Mon. May 20th, 2024

கரவெட்டி தெற்கில் 49 பேருக்கு தொற்று உறுதி

கரவெட்டி தெற்கு பகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரவெட்டி தெற்கு பகுதியில் வளிமண்டல திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் அப்பகுதியில் உள்ள ஆலய திருவிழாவில் தொண்டு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட 179 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.  இதனடிப்படையில் அப்பகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சமூகத் தொற்று ஏற்படுவதற்கு பொதுமக்களே காரணம் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் தொற்று பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களுடன் திருவிழா காணும் ஆலயங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிகையான பக்தர்களுடன் ஆலய நிகழ்வை செய்து முடித்தனர்.  ஆனால் தற்போது அரசாங்கம் வெளியிட்ட சுற்றுநிரூபத்தை தவறாக கருதி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவதில் சுகாதார நடைமுறைகளை மீறியும், பல எண்ணிகையானோர் ஒன்று கூடி முகக் கவசம் அணியாமல் திருவிழாக்களையும் நடாத்தியதன் விளைவையே நாம் இப்போது அனுபவிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மாலைசந்தையான் பிள்ளையார் ஆலயத்தின் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்