Fri. May 17th, 2024

கண்துடைப்புக்காக நாட்டை முடக்கும் அரசாங்கம்

குறைந்தது இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு சுகாதார அதிகாரிகள் கூறி வரும்நிலையில் அரசாங்கம் அதற்கு உடன்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வாரங்களில் கோரோனோ தொற்று மற்றும் உயிரிழப்புகள் உச்சத்தை தொடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தது வருகிறார்கள்.

இந்தியாவின் அநேக மாநிலங்கள் கோரோனோ தொற்றுக்களை குறைப்பதற்காக முடக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா போன்ற நாடுகளில் மக்களின் நலன் கருதி 2 மாதங்களுக்கு மேல் டொரோண்டோ நகரம் முடக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரம் குன்றி விடும் என்ற ஒரேநோக்கத்திற்காக நாட்டை முடக்காமல் அரசாங்கம் நடத்தி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கோரோனோ தொற்றால் ஏற்படவுள்ள உயிரிழப்புகள் மற்றும் அதிகரித்த தொற்றாளர்களால் ஏற்படவுள்ள சுகாதார செலவீனங்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை.
அரசியல்வாதிகள் அனைவருக்கும் கோரோனோ தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அவர்கள் கவனம் எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே??

எவ்வளவு பிணங்கள் விழுந்தாலும் நாட்டை இன்னொருத்தரம் முடக்கமாட்டேன் என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்ததாக பிரித்தானியா பத்திரிகைகளில் செய்தி வந்து, போரிஸ் ஜான்சனை இக்கட்டான நிலைமைக்கு தள்ளியிருந்தது.
இந்த நிலையில் இலங்கையில் எவ்வாறான வீர வசனங்களை அரசியல் வாதிகள் விடுத்து வருகிறார்களோ தெரியாது .. அவ்வாறு தெரிவித்தாலும் அவைகள் வெளிவருமா என்பது கேள்விக்குறியே .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்