Sun. May 19th, 2024

கட்டம் கட்டமாக பாடசாலைகள் திறக்க முயற்சி 

இலங்கையில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி மே மாதம் 11ஆம் திகதி அரச ஊழியர்கள் பணிகளை ஆரம்பிக்கும் போது அதிபர் ஆசிரியர்களுக்கும் மற்றைய அலுவலக ஊழியர்களும் பணிகளுக்கு செல்ல வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி முதல் வாரத்தில் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு மற்றும் தொற்று நீக்கிகளை தெளித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பின்னர் உயர்தரம் மற்றும் சாதாரண தர மணாவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் அதன் பின்னர் ஜுன் முதலாம் திகதியளவில் மீண்டும் பாடசாலைகளை அனைத்து மாணவர்களுக்காக திறப்பதற்கும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
உயர்தரம் மற்றும் சாதாரண தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் 5ஆம் தரத்தில் இருந்து 10ஆம் தரம் வரை வகுப்புகள் திறக்கப்படவுள்ளதுடன் பின்னர் ஒருவாரத்தில் ஆரம்ப வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது பாடசாலை நுழைவாயில் பகுதியில் கைகழுவுவதற்கான குழாய்களை பொருத்த வேண்டும். பிள்ளைகள் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்