Sun. May 19th, 2024

கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் உட்பட அனைவருமே இதற்கு காரணம்

தமிழ் மக்களின்பிரதிநிதிகள் நாங்கள் தான் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மிகசிறிய எண்ணிக்கையிலானவர்களே இனப்பிரச்சினை குறித்து பேசுகின்றனர். ஆனால் பொருளாதார தீர்வுகளே தேவையாக காணப்படுகின்றன.

வடக்கு கிழக்கிலிருந்து சமீபத்தைய தேர்தல்கள் மூலம் 11 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள். மக்கள் தமக்கு நீர்ப்பாசனம் மீண்டும் கிடைக்கவேண்டும் என விரும்புகின்றனர்.

தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு உத்தரவாதத்தை விரும்புகின்றனர். உறுதியான கல்விமுறை மற்றும் சமூகங்களுடன் ஆரோக்கியமான உறவுகளை விரும்புகின்றனர்.

ஆனால் இது பல தடவை மீறப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு காரணமாகும். அவர்கள் ஒற்றுமையின்மையை ஊக்குவிக்கின்றனர், மக்கள் ஏனைய சமூங்களுடன் ஐக்கியத்துடன் வாழவிரும்புகின்றனர் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

இது சிலருக்கு அரசியல் ரீதியிலான தேவை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின்பிரதிநிதிகள் என தெரிவிப்பது வழமை. ஆனால் இனிமேல் அவர்கள் அவ்வாறு தெரிவிக்க முடியாது.

இந்நிலையில், 13வது திருத்தத்தை மீளாய்வு செய்யவேண்டும். 1986 முதல் நாங்கள் பொலிஸ் காணி அதிகாரம் குறித்து பேசுகின்றோம். எனினும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த முறையொன்றை முன்வைக்கமுடியும்.

இந்தியா 13 வது திருத்தம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து, அந்த தருணத்தில் அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து விடுபட முயன்றார்கள் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்