Fri. May 17th, 2024

ஓமந்தை விபத்தில் 4 இராணுவத்தினர் உட்பட 5 காயம்

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரிகள் 4 பேர் உட்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு புளியங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இராணுவ வேன் மற்றும் சிறிய கெப் ரக வாகனம் ஒன்று மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.இந்நிலையில் வேனில் பயணித்த 4 பேர் மற்றும் கெப் ரக வாகன சாரதி காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவரும் பலத்த காயம் அடையவில்லை என்றும் அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்