Tue. May 21st, 2024

ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால், இதய நோய்க்கான  உங்கள் ஆபத்தை குறைக்கலாம் !!

ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால், இதய நோய்க்கான  உங்கள் ஆபத்தை குறைக்கலாம், சீனாவில் 400,000 க்கும் அதிகமானவர்கள் பங்கேற்ற ஆய்வில்  வெளிவந்த தகவல் .

 

தினசரி முட்டை உணவு உண்பவர்கள்  18% குறைவான இதய நோய்மூலம்  இறக்கும் சந்தர்ப்பத்தை கொண்டுள்ளனர். இங்கு இதய நோய் என்று  இதயத் தாக்குதல்கள் (heart attacks) and  மற்றும் பக்கவாதம் (strokes) போன்றவற்றை குறிப்பிடுகின்றனர்.

 

மருத்துவர்கள் கடந்த காலங்களில்  முட்டைகளை அதிகம்  சாப்பிடுவதை தவிர்க்குமாறு ஆலோசனைகளை வழங்கி இருந்தார்கள். நம்ம ஊரில் 35-40வயதை அடைந்தால் அதிகம் பேர் முட்டை சாப்பிடுவதை  தவிர்த்து வந்தார்கள்.  இது இதய நோயை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையால். நம்ம ஊர் பெண்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. எதோ முட்டை தங்கள் கணவர்மார்களுக்கும்  குழந்தைகழுக்குமான உணவு என்றே கருதி வந்தார்கள். நம்ம ஊர் டிவி பிரபலங்களும் முட்டை வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு , முட்டைக்கு எதிரான நம்பிக்கையை எங்கள் சமுதாயத்தில் ஆழமாக ஊன்றிவிடடார்கள்

முட்டைகளில்  உயர் தரமான புரதம் மற்றும் பிற நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்து கூறுகளை  கொண்டிருந்த போதிலும்,  அதிக அளவில் நிறைந்திருக்கும் கொழுப்பு  தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கை கடந்த காலங்களில் இருந்து வந்தது என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், பெய்ஜிங் பல்கலைக்கழக  இணை பேராசிரியுமான கேங்கிங் யூ கூறினார்.

“முட்டை மற்றும் இதய நோய்கள் இடையிலான தொடர்பு பற்றிய கடந்தகால  ஆய்வுகள் சிறிய மாதிரி அளவு மற்றும் குறைவான தகவல்களால் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன,” என்று அவர் கூறினார் . கடந்த ஆய்வுகளளில்  சீன மக்களிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மட்டுமே பெறப்பட்ட்ன , “இது உணவு பழக்கம், வாழ்க்கை முறை நடத்தை மற்றும் நோய்களின் முறைகள் ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகளான  தகவல்களாக அமைந்தது   ” என்று யூ கூறினார்.

இது போன்ற காரணங்களால்தான்,முட்டைகள் சாப்பிடுவதற்கும்   இருதய நோய்களுக்குமான  உறவுகளை ஆராய்வதற்கு அவரும்  மற்றும் அவரது சக ஊழியர்களும் முடிவு செய்தார்கள்

சீனாவின் 10 பிராந்தியங்களில் வாழ்கின்ற அரை மில்லியன் வயதுவந்தவர்களின் (adults) தகவல்களைப் தற்போதைய ஆய்வுகளில் அவர்கள்  பயன்படுத்தினர். அவர்களில்  புற்றுநோய், இதய நோய் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாத 416,213 பங்கேற்பாளர்கள் மீது கவனம் செலுத்தினர்.

இந்த வயது வந்தவர்களில் 13% க்கும் அதிகமானவர்கள் ,30 முதல் 79 வயதிற்குட்பட்டவர்கள், தினமும்  ஒரு முட்டை சாப்பிட்டார்கள் , அதில் , 9% க்கும் அதிகமானவர்கள் ஒருபோதும் அல்லது அரிதாக  முட்டைகளை சாப்பிடடவர்கள் . கிட்டத்தட்ட அனைத்து பங்கேற்பாளர்கழும்  கோழியும் முட்டையும்  சாப்பிட்டனர் என்று  யூ குறிப்பிட்டார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஆராய்ச்சிக் குழு இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை கண்காணித்தது . அவர்கள் முக்கியமான சம்பவங்களான இரத்த அழுத்தம், இதய பக்கவாதம் – ஒரு இரத்தக் குழல் மூளைக்கு உணவளிக்கும் போது, ​​இதயத் தாக்குதல்கள் மற்றும் பக்கவாதம் போன்ற முக்கிய இதய நிகழ்வுகளில் கவனம் செலுத்தினார்கள்.

“இருதய நோய்கள் மொத்த இறப்பு விகிதத்தில் பாதிக்கும்  மேலான  இறப்புக்கு முக்கிய காரணமாக சீனாவில் உள்ளன,” என அவர் கூறினார், “இரத்தக் கொந்தளிப்பு மற்றும் நோயெதிர்ப்பு வீச்சு உட்பட ஸ்ட்ரோக், முன்கூட்டியே இறப்பதற்கான முதல் காரணியாகும்.

இந்த கண்காணிப்பு காலத்தின்போது  ​​9,985 பேர் இதய நோயினால் இறந்துவிட்டனர், மேலும்  5,103 பேருக்கு  முக்கிய இதயக்குழாய் அடைப்பு சம்பந்தமான  நிகழ்வுகள் நிகழ்ந்தன. கிட்டத்தட்ட 84,000 பங்கேற்பாளர்களுக்கு இந்த காலத்தில் இதய நோய்கள் இருப்பதற்கான சான்றுகள்   கண்டறியப்பட்டது

 

ஆய்வின் தரவுகளைப் பகுத்தாராயும்போது , தினமும் முட்டை சாப்பிட்டு வந்தவர்கள் குறைவான இருதயநோய் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட்து ஆராய்ச்சியாளர்களால்  கண்டறியப்பட்ட்து., தினமும் முடடை  சாப்பிடுவதால் இருதய நோய்க்கான  ஆபத்து குறைவாக ஏற்படுகிறது.

உண்மையில், தினமும் ஒரு முட்டை வரை சாப்பிடும் பங்கேற்பாளர்கள்  ஹெமோர்சிகல் ஸ்ட்ரோக்கின் (hemorrhagic stroke)  26 சதவீதம்  குறைவான அபாயத்தை கொண்டிருந்தனர. மேலும்  முட்டை உண்பவர்கள் இந்த வகையிலான நோய்மூலம் இறக்கும்  அபாயத்தை  28 சதவீதம்  குறைவாக கொண்டிருந்தனர்.

இந்த முடிவுகளின்படி , தினமும் ஒன்றுக்கு குறைவான முட்டை சாப்பிடுவபர்கள்  குறைந்த இதயநோய்க்கான அறிகுறிகைளை கொண்டிருந்தார்கள் . இந்த ஆராய்ச்சியே இதுவரை மேற்கொள்ளபடடதில்  “மிகவும் சக்திவாய்ந்தது என்று அவர் கூறினார்.

 

ஆய்வின் தரவுகளைப் பகுத்தாராயும்போது , தினமும் முட்டை சாப்பிட்டு வந்தவர்கள் குறைவான இருதயநோய் தாக்கத்திட்கு உட்படுத்தப்பட்ட்து ஆராய்ச்சியாளர்களால்  கண்டறியப்பட்ட்து., தினமும் முடடை  சாப்பிடுவதால் இருதய நோய்க்கான  ஆபத்து குறைவாக ஏற்படுகிறது.

உண்மையில், தினமும் ஒரு முட்டை வரை சாப்பிடும் பங்கேற்பாளர்கள்  ஹெமோர்சிகல் ஸ்ட்ரோக்கின் (hemorrhagic stroke)  26 சதவீதம்  குறைவான அபாயத்தை கொண்டிருந்தனர். மேலும்  முட்டை உண்பவர்கள் இந்த வகையிலான நோய்மூலம் இறக்கும்  அபாயத்தை  28 சதவீதம்  குறைவாக கொண்டிருந்தனர்.

இந்த ஆராய்ச்சியே இதுவரை மேற்கொள்ளபடடதில்  “மிகவும் சக்திவாய்ந்தது என்று அவர் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்