Fri. May 17th, 2024

ஏமாற்றப்பட்டதாக குமுறும் வாசுதேவ, மனவுளைச்சலில் கம்மன்பில கூட்டணிக்குள் முறுக்கம் ஆரம்பம்

தான் ஏமாற்றப்பட்டு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அமைச்சர் வாசுதேவா நானாயக்கரா தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பெறாததை இட்டு தான் வருந்தவில்லை என்றும் தனது பணியை நிறைவேற்றுவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார் .

அலரிமாளிகையில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்திலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளர் ஆவதை எதிர்த்து வந்த வாசுதேவ நாணயக்கார பின்னர் எதிர்ப்பகைவிட்டு ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னொரு கூட்டணிக்கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் தனக்கு பிரதி அமைச்சர் பதவிகூட கிடைக்காததையிட்டு கடும் விரக்தியில் இருப்பதுடன், ராஜபக்சக்களுடன் முரண்பட்டு அரசியல் எதிர்காலத்தை இழக்காமல் இருப்பதற்காக அமைதி காப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆரம்பம் முதல் விமல் வீரவன்சவுடன் சேர்ந்து கோத்தபாய ஜனாதிபதி ஆவதை ஆதரித்து வந்தநிலையில் , விமல் வீரவன்ச மட்டும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருப்பது அவரை கடும் மனவுளைச்சலுக்கு உள்ளாக்கி இருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்