Fri. May 17th, 2024

எதிர்வரும் 17 ஆம் திகதி அளவில் பலாலியில் இருந்து விமான சேவை

பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு தீர்மானித்திருப்பதுடன், சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
சர்வதேச பயணங்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியளவில் விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சினால் பிராந்திய விமானநிலையமாக விளங்கிய பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு , சர்வதேச பயணங்களுக்காக பலாலி விமனநிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதி அளவில் திறந்துவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் சர்வதேச விமானநிலையத்திற்கான சர்வதேச சிவில் விமானசேவை அமைப்பின் குறியீட்டு இலக்கம் வி.சி.சி.ஜே(VCCJ) இருப்பதுடன் அதன் சர்வதேச விமானப்போக்குவரத்து அமைப்பின் குறியீட்டு இலக்கம் ஜே.ஏ.எப் ( JAF ) ஆகவும் வழங்கப்படுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்