Thu. May 16th, 2024

எண்ணெய் கப்பல்களில் தீ: 9 பேர் காயம்!! -தென்கொரியா துறைமுகத்தில் சம்பவம்-

தென்கொரியா துறைமுகத்தில் தரித்து நின்று 2 எண்ணெய் கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீவிபத்துச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 9 மாலுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.

தென்கொரியாவில் உல்சான் நகரத்தில் உள்ள துறைமுகத்தில், நிறுத்தப்பட்டிருந்த 25,000 டன் எடை கொண்ட கேமன் தீவுகளுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், இன்று சனிக்கிழமை காலை திடீரென தீப்பற்றியது.

அப்போது ரசிய பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.

கப்பல் முழுவதும் தீ பரவி, கரும்புகை வெளியேறிய நிலையில், காற்றின் வேகம் காரணமாக தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கப்பலுக்கும் பரவியது.

தகவல் அறிந்து வந்த கடற்படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், இரு கப்பல்களிலும் இருந்த ரஷ்யா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 46 மாலுமிகளையும் மீட்டு, தீயை அணைத்தனர்.

ஆனால் அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 மாலுமிகளும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் திடீரென தீ உருவாக காரணம் என்ன என்பது குறித்து அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்