Fri. May 17th, 2024

ஊரடங்கு காலத்தில் நோயாளர் காவு வண்டியை ஊழியர்களின் சேவைக்கு பாவித்தமை தொடர்பாக விசாரணை

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கோரோனோ தாக்கம் காரணமாக ஊரடங்கு நேரத்தில் வைத்தியசாலையை இயங்க வைப்பதற்காக , ஊழியர்களை ஏற்றி இறக்குவதற்கு முன்னாள் மந்திகை வைத்தியசாலையின் வைத்திய அட்சகர் ஆம்புலன்ஸ் வண்டியை பாவிப்பதற்கு அனுமதி அளித்திருந்தார். இந்த காலப்பகுதியில் ஊழியர்களுடன் வைத்திய அட்சகரும் அதில் பயணம் செய்திருந்துள்ளார்.
தற்பொழுது இது தொடர்பாக விசாரணை இடம்பெற்று அதற்கான பணத்தினை செலுத்துமாறு வைத்திய அட்சகருக்கு சுகாதார திணைக்களம் உத்தரவு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக எங்கள் செய்தி சேவையை தொடர்புகொண்ட , ஆம்புலன்ஸில் பயணம் செய்த ஊழியர் ஒருவர் தெரிவிக்கும் பொழுது, வைத்திய அட்சகர் மேலும் 14 ஊழியர்களுடன் இந்த ஆம்புலன்ஸில் பயணம் செய்ததாகவும், அவர் நினைத்திருந்தால் தனது அதிகாரத்தை பாவித்து தனியாக சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
கோரோனோ ஊரடங்கு காலத்திலும் வைத்தியசாலையை இயக்கி நோயாளருக்கு உரிய சேவையை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே வார் இதனை செய்ததாக தெரிவித்தார். அவ்வாறு கட்டணம் அறவிடும் இடத்து இதில் பயணம் செய்த ஊழியர்கள் அனைவரும் அதனை பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்