Tue. May 21st, 2024

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தினரால் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளையும் போட்டிகளையும் நடாத்தவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.    உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கம் தனது இலக்கு நோக்கிய பயணத்தில்  விளையாட்டை சிறுவயதில் கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். இதனால் போட்டிக்கான திறன்களை வளர்த்து எதிர்காலத்தில் சிறந்த வீரவீராங்கனைகளை உருவாக்கி எமது இனத்தின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் இலங்கையிலே பிரகாசிக்க செய்து தமிழர் இல்லாது இலங்கை அணி இல்லை என்று சொல்லும் காலம் வெகு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக வடமாகாணத்தில் வலிகாமம் கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரனின் ஆலோசனைக்கு இணங்க Northern sports college இன் அனுசரணையில் முதல் தடவையாக உடுவில் கோட்டத்தில் ஆரம்பித்து, பின்னர் ஏனைய வலயங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டு  மாகாண ரீதியாக போட்டிகளை நடாத்த உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான கலந்துரையாடல் Northern sports college இல் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப. தர்மகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வலிகாமம் வலயத்தின் கல்வி முகாமைத்துவ பிரதிக்கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன், ஆரம்பகல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் சி.முரளிதரன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ப.பார்த்தீபன் கோட்டக்கல்விப் பணிப்பாளர் செ. மோகனநாதன், ஆரம்பகல்வி விளையாட்டு வேலைத்திட்ட வளவாளர்  சி.சிவரதீஸ், Northern sports college இன் இயக்குனர் க.சசிக்குமார் மற்றும்  பயிற்சியாளர்கள் நா.திலகராஜ் ந.சுகந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்