Fri. May 17th, 2024

இவ் வாரம் யாழ் மாவட்டத்தில் மக்கள் வங்கி கிளைகள் திறக்கும் நாட்கள்

யாழ் மாவட்டத்தில் உள்ள மக்கள் வங்கி கிளைகள் இன்று  முதல் எதிர்வரும் 18 ம் திகதி வரை திறக்கப்படும் நாட்கள் பற்றி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி இன்று 14ம் திகதி ஸ்ரான்லி வீதி கிளை, நெல்லியடி கிளை, சங்கானை கிளை, கொடிகாமம் கிளை,  மல்லாகம்  சேவிஸ் சென்ரர், புலோலி சேவிஸ் சென்ரர்,  உரும்பிராய் சேவிஸ் சென்ரர் ஆகியனவும்,
15ம் திகதி யாழ் பிரதான வீதி கிளை, சுன்னாகம் கிளை, ஊர்காவற்துறை கிளை, கன்னாதிட்டி கிளை, கைதடி சேவிஸ் சென்ரர், அளவெட்டி சேவிஸ் சென்ரர், உடுப்பிட்டி  சேவிஸ் சென்ரர் ஆகியனவும்,
16ம் திகதி யாழ் பல்கலைக்கழக கிளையும்,  சாவகச்சேரி கிளை, பருத்தித்துறை கிளை, புத்தூர் சேவிஸ் சென்ரர், மானிப்பாய் சேவிஸ் சென்ரர்,  கே.கே.எஸ். சேவிஸ் சென்ரர் ஆகியனவும்,
17ம் திகதி கன்னாதிட்டி கிளை,  கொடிகாமம் கிளை, அச்சுவேலி கிளை, கொக்காவில் சேவிஸ் சென்ரர், திருநெல்வேலி சேவிஸ் சென்ரர், பண்டத்தரிப்பு சேவிஸ் சென்ரர் ஆகியனவும்,
18ம் திகதி ஸ்ரான்லி வீதி கிளை,  தெல்லிப்பளை கிளை, வல்வெட்டித்துறை கிளை, சாவகச்சேரி கிளை, இணுவில் சேவிஸ் சென்ரர்,  கல்வியங்காடு சேவிஸ் சென்ரர்,  கோப்பாய் சேவிஸ் சென்ரர் ஆகியனவும்  இயங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை இயலுமான வரைக்கும் இயந்திரத்தினூடாக மேற்கொள்ளுமாறும் மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற்று உள் வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்