Sat. May 18th, 2024

இலங்கை ஹொக்கிச் சம்மேளனத்தின் உப தலைவராக டானியல் மதியழகன் தெரிவு

2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஹொக்கி சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவில் இலங்கை ஹொக்கிச் சம்மேளனத்தின் உபதலைவராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் போதனாசிரியரும், யாழ் பல்கலைக்கழக ஹொக்கி அணியின் பயிற்றுவிப்பாளரும்,  யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி டிப்ளமோ கற்கை நெறியின் ஹொக்கி விரிவுரையாளருமான டானியல் மதியழகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஹொக்கிச் சம்மேளனத்தின் 2021ம் ஆண்டுக்கான தேர்தல் இன்று  செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சின் டங்கன் வைற்  கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

இதில் சம்மேளனத்தின் தலைவராக டி.எஸ்.கே.புஸ்பகுமார, உபதலைவர்களாக டானியல் மதியழகன்,  டி.எஸ்.விஜயசிங்க, ஆர்.மகேஸ்வரன், பெர்ணான்டோ, செயலாளராக பி.விஸ்வநாதன்,  உப செயலாளர்களாக பி.பஸ்நாயக்க, ஜி.எஸ்.கபுகொட்டுவ, பொருளாளராக கே.ஜெயரட்ணம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்