Fri. May 17th, 2024

இமையாணன் மத்தி காலிறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்

இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் “இளையோர் வெற்றி கிண்ணம்” தொடரில் இமையாணன் மத்தி அணி காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று குறித்த கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இமையாணன் மத்தி அணியை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனிஸ் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இமையாணன் மத்தி அணி வீரர்கள் அலெக்சன், டிவிசன் ஆகியோர் ஒவ்வொரு கோல்களைப் போட முதல் பாதியாட்டத்தில் இமையாணன் மத்தி அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்திலும் இமையாணன் மத்தி அணி வீரர்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அலெக்சன் மற்றும் ஜீவித் ஆகியோர் மேலும் ஒவ்வொரு கோல்களைப் போட ஆட்ட நேர முடிவில் இமையாணன் மத்தி அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்