Tue. May 21st, 2024

இந்தியா சாரம் மற்றும் சோட்டிகளுக்கு விரைவில் தட்டுப்பாடு ?

நேற்றையதினம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் நாட்டிற்கு கைத்தறி மற்றும் பாடிக் ஜவுளி இறக்குமதி செய்வதை நிறுத்த இலங்கை முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தது .

இதன் மூலம் இந்தியாவில் இருந்து சாரம் மற்றும் பெண்களுக்கான சோட்டி துணிகள் என்பன இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளதால் இவைக்கான தட்டுப்பாடு இலங்கையில் ஏற்பட வாய்ப்புள்ளது

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படாதவது…
, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது

“உள்ளூர் ஜவுளித் தொழிலுக்கு அதிக உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காக கைத்தறி மற்றும் பாடிக் ஜவுளி இறக்குமதி செய்வதை நிறுத்த முடிவு செய்தேன்” என்று ஜனாதிபதி கூறினார்.

கைத்தறி மற்றும் பாடிக் ஜவுளிகளின் உள்ளூர் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கும், அதிக உற்பத்தியாளர்களை தொழில்துறையில் ஈர்ப்பதற்கும் ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில், நாட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நேற்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்