Fri. May 17th, 2024

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவச மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் (Covishield and Covaxin) கொரோனா வைரஸ் மருந்து இம் மாத இறுதியில் இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் இந்தியா, கொரோனா வைரஸ் மருந்தை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை வழங்குவதற்கு அந்த நேரத்தில் தயாராகயிருப்பார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்தை கொள்வனவு செய்யும் முகவராக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் செயற்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான 4,000 மருந்தகங்களை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமை அளிக்கவேண்டியவர்கள் குறித்து தீர்மானித்துள்ளோமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்